EVENT NEWS › 2026

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS CANBERRA’ போர்க்கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

26 Oct 2026

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS CANBERRA (LCS 30)’ போர்க்கப்பல், விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (2026 ஒக்டோபர் 26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினரால் அக்கப்பல் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டது.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள Littoral Combat வகையைச் சேர்ந்த ‘USS CANBERRA (LCS 30)’ கப்பலின் நீளம் 127.6 மீட்டர்களாகும். இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் C Towles செயற்பட்டு வருகின்றார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்ட ‘USS CANBERRA (LCS 30)’ கப்பல், அப்போதிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு முன்னரும், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி, இக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.

Accessibility Tools