EVENT NEWS 2026

‘INS UDAYGIRI’ கப்பலின் அங்கத்தவர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்

10 Sep 2026

உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த நாட்களில் தீவிற்கு வருகை தந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பலின் அங்கத்தவர்கள், இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொண்ட கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் ஒன்று, இன்றைய தினம் (2026 செப்டம்பர் 10) கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய கடற்கரை பிராந்தியத்தை உள்ளடக்கிய வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் ‘INS UDAYGIRI’ கப்பலின் அங்கத்தவர்களும், மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம், காலி முகத்திடல் கடற்கரைப் பகுதியை ஒட்டி சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட பெருமளவிலான திடக் கழிவுகளை சேகரித்து, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக அகற்றுவதற்கு கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Accessibility Tools