உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டை வந்தடைந்த 'INS UDAYGIRI' போர்க்கப்பல் நாட்டை விட்டுப் புறப்பட்டது
உத்தியோகபூர்வ விஜயமாக 2026 செப்டம்பர் 08 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்றைய தினம் (2026 செப்டம்பர் 11) நாட்டை விட்டுப் புறப்பட்டதுடன், இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு இணங்க, கொழும்பு துறைமுகத்தில் ‘INS UDAYGIRI’ கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
‘INS UDAYGIRI’ கப்பல் நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில், அதன் அங்கத்தவர்கள் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கைப்பந்து போட்டியொன்று, கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் மற்றும் கடற்படையின் விசேட படகுப் படையணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கப்பல்களில் பிரவேசித்தல், பரிசோதித்தல் மற்றும் கைது செய்தல் தொடர்பான பயிற்சி என்பவற்றில் கலந்துகொண்டனர்.
‘INS UDAYGIRI’ கப்பலால் கொண்டுவரப்பட்ட கப்பல் உதிரிப்பாகங்கள் அடங்கிய விநியோகப் பொருட்கள் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டதும் இந்த விஜயத்தின் போது இடம்பெற்றதுடன், கப்பலின் பணியாளர்கள் கொழும்பு பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதிலும் கலந்துகொண்டனர்.
மேலும், இத்தகைய உத்தியோகபூர்வ விஜயங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு, அனுபவங்கள், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் ஊடாக, சமுத்திரப் பிராந்தியத்தின் புதிய போக்குகள் மற்றும் சவால்களுக்கு வெற்றிகரமாகக் கூட்டாகப் பதிலளிப்பதற்கு இலங்கைக் கடற்படைக்கு இயலுமாகும்.













