இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல் நாட்டை வந்தடைந்தது
இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல், விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக இன்று (2026 செப்டம்பர் 09) நாட்டை வந்தடைந்ததுடன், அக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள 'Landing Helicopter Aircraft' வகையைச் சேர்ந்த ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல் 180 மீட்டர் நீளமுடையதுடன், இதன் கட்டளை அதிகாரியாக கெப்டன் Marco GUERRIERO பணியாற்றுகிறார்.
மேலும், இப்போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இதன் கட்டளை அதிகாரி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியைச் சந்திக்கவுள்ளார்.
1 /
6













