லெப்டினன்ட் கமாண்டர் தாரு ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட புதிய சிறுகதைத் தொகுப்பு கடற்படை தளபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது
லெப்டினன்ட் கமாண்டர் (சிவில் இன்ஜினியர்) தாரு ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட ‘ஹோமுஸ் & Dr. வில்சனின் புலனாய்வு கதைகள்’ என்ற நகைச்சுவைச் சிறுகதைத் தொகுப்பு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிடம் இன்று (2026 செப்டம்பர் 15) கடற்படைத் தலைமையகத்தில் வழங்கி வைக்கப்பட்டதுடன், அவரின் தனித்துவமான நகைச்சுவை படைப்பாற்றலை கடற்படைத் தளபதி பாராட்டி கௌரவித்தார்.
‘ஹோமுஸ் & Dr. வில்சனின் புலனாய்வு கதைகள்’ என்ற நூல், உலகின் புகழ்பெற்ற புலனாய்வுக் கதைத் தொடரின் கதாபாத்திரங்களைப் பின்பற்றி, இலங்கையில் புலனாய்வு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த இரு இலங்கையர்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு நகைச்சுவைச் சிறுகதைத் தொகுப்பாக லெப்டினன்ட் கமாண்டர் (சிவில் இன்ஜினியர்) தாரு ராஜபக்ஷவினால் படைப்பாற்றலுடன் எழுதப்பட்டுள்ளது.
1 /
6













