கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்
வடக்கு கடற்படை கட்டளைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி வருகை தந்த கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, அக்கட்டளையின் செயல்பாட்டு, நிர்வாக, அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் செயல்பாட்டு நோக்கம் குறித்து அக்கட்டளையின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கு தெளிவுபடுத்தினார்.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தனவுடன், பணியாளர் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன, சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவீந்திர குணசிங்க, விநியோக மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அச்சல டி சில்வா, கடற்படை காலாட்படை தளபதி ரியர் அட்மிரல் குசல் திசாநாயக்க மற்றும் கட்டளையின் துறைத் தலைவர்களுடன் இணைந்து, யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் 'வேளுசுமன' நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு கடமைகள் மற்றும் செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி கலந்துகொண்ட கடற்படை தளபதி, மண்டைதீவின் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காகவும், அது சார்ந்த மீனவ சமூகம் உள்ளிட்ட மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்காகவும் ஆற்றப்படும் பங்களிப்பை மேலும் திறம்பட மேற்கொள்வதற்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையிலுள்ள இலங்கை கடற்படை நிறுவனமான 'கஞ்சதேவ'வில் அதிகாரிகள் மற்றும் கடற்படையினரிடையே உரையாற்றிய கடற்படைத் தளபதி, வடக்கின் தீவுப் பகுதி மக்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவும் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பங்களிக்குமாறு வலியுறுத்தினார்.
மேலும், இவ் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது யாழ்ப்பாணம் புங்குடுதீவு மற்றும் அப்பகுதியைச் சார்ந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை நிறுவனமான 'கோடைம்பற'வினால் கடற்படைப் படகுத்துறை மற்றும் குறிகட்டுவான் படகுத்துறை ஆகியவற்றைச் சுற்றி மேற்கொள்ளப்படும் செயல்பாட்டு மற்றும் அபிவிருத்தி பணிகளைப் பார்வையிடுவதில் பங்கேற்ற கடற்படைத் தளபதி, பின்னர் யாழ்ப்பாணம் காரைநகரில் அமைந்துள்ள இலங்கை கடற்படை நிறுவனமான 'எளார'விற்கும் விஜயம் செய்தார். அங்கு, அப்பகுதிக் கடல் எல்லையில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் செயல்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கிய கடற்படைத் தளபதி, கடற்படையினரால் எலார நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய படகுத்துறையின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தையும் பார்வையிட்டார்.
மேலும், வடக்கின் தீவு சார்ந்த பகுதிகளில் உள்ள கடற்படை நிறுவனங்கள் மற்றும் படகுகளில் சேவையாற்றும் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதும் இவ் விஜயத்தின் போது கடற்படைத் தளபதியால் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், தீவு சார்ந்த மக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல், அத்துடன் தேசிய பாதுகாப்பிற்கு இணையாக தேசிய அபிவிருத்திக்காகவும் கடற்படை ஆற்றிவரும் பரந்த அளவிலான பங்களிப்பிற்காக கடற்படை வீரர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை கடற்படை எதிர்பார்க்கின்றது என, அதிகாரிகள் மற்றும் கடற்படையினரிடையே உரையாற்றும் போது கடற்படைத் தளபதி அங்கு வலியுறுத்தினார்.













