EVENT NEWS › 2026

காலி மாபாலகம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கடற்படையினரின் இடர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

25 Sep 2026

கிங் கங்கையின் வான்பாய்தல் காரணமாக காலி மாவட்டத்தின் மாபாலகம பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடற்படை இடர் நிவாரணக் குழுக்களினால் இன்றைய தினமும் (2026 செப்டம்பர் 25) அப்பகுதி மக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காகத் தென் மாகாணத்தின் தவலம, ஹினிதும, மாபலகம, தொடங்கொட, உடுகம, நாகொட மற்றும் ஹபரகொட ஆகிய பகுதிகளுக்கு ஏழு (07) கடற்படை இடர் நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கிங் கங்கையின் வான்பாய்தலால் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்காகப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும் இவ்வாறாகக் கடற்படை இடர் நிவாரணக் குழுக்கள் தேவையான உதவிகளை வழங்கின.

Accessibility Tools