‘TECHNO – 2026’ கண்காட்சியில் கடற்படைப் பொறியியல் புத்தாக்கச் சிறப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன

16 Oct 2026

இலங்கைப் பொறியியலாளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘TECHNO – 2026’ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி, 2026 ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது. இக்கண்காட்சியில் இலங்கை கடற்படையின் பொறியியல் புத்தாக்கச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் கடற்படையும் பங்கேற்கின்றது.

(Engineering for a Resilient Nation) எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சி, பொறியியல் வல்லுநர்கள், கைத்தொழில் துறைப் பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்குநர்கள் ஆகியோருக்குப் பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உருவாக்கப்பட்டுள்ள மேம்பட்ட புத்தாக்கங்களைக் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இக்கண்காட்சியில் இலங்கை கடற்படை பங்கேற்பதன் மூலம், இலங்கை கடற்படையின் பொறியியல் ஆற்றல்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவை தேசிய தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கக்கூடிய விதம் வெளிப்படுத்தப்படுகின்றது. மேலும், பொறியியல் துறையின் நிபுணர்களுடன் கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைப்பதன் மூலம், புதிய அறிவு மற்றும் திறன்களைப் பெற்றுக்கொள்ளுதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் கடற்படைக்குக் கிடைக்கின்றது.

மேலும், பாதுகாப்புத் துறை மற்றும் சிவில் துறையைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்களிடையே அறிவுப் பரிமாற்றத்திற்கான தனித்துவமான தளத்தை உருவாக்கியுள்ள ‘TECHNO – 2026’ கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம், புத்தாக்கம், தொழில்சார் மேம்பாடு மற்றும் பொறியியல் துறையின் சிறப்புத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன், தேசிய அபிவிருத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஆற்றல்களை வலுப்படுத்துவதிலும் இலங்கை கடற்படை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வலியுறுத்தப்படுகிறது.

Accessibility Tools