இலங்கை கடற்படை கப்பலான 'கஜபாகு' கப்பலின் புதிய கட்டளை அதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படை கப்பலான 'கஜபாகு' கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கெப்டன் அசோக வீரசேகர, இன்று (2026 செப்டம்பர் 29) கொழும்பு பண்டாரநாயக்க இறங்கு துறையில் குறித்த கப்பலின் கட்டளை அதிகாரிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
அதற்கமைய, கடற்படை பாரம்பரியப்படி புதிய கட்டளை அதிகாரி இலங்கை கடற்படை கப்பலான 'கஜபாகு' கப்பலுக்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, அக் கப்பலின் கட்டளை அதிகாரியாகப் பணிப்புரிந்த கெப்டன் அரோஷ ஜயதுங்கவினால் புதிய கட்டளை அதிகாரியிடம் உத்தியோகப்பூர்வமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மேற்கு கடற்படைக் கட்டளையின் பிரதி தளபதி கொமடோர் அருண விஜேவர்தன கலந்துகொண்டார்.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பலான 'கஜபாகு', அப்போதிலிருந்து கடற்படை கப்பற்பிரிவுடன் இணைக்கப்பட்டு தொடர்ச்சியான கடல்சார் நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்து வருகிறது.













