EVENT NEWS › 2026

மருத்துவமனை சேவைகள் சபையினால் வடமேற்கு கடற்படை மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கல்

24 Sep 2026

மருத்துவமனை சேவைகள் சபை, சிஹசர அறக்கட்டளை மற்றும் ஜனவிஜய முன்பள்ளித் திட்டத்தின் பணிப்பாளர் பூஜ்ய ரஜவெல்லை சுபூதி தேரரினால் வடமேற்கு கடற்படை கட்டளை மருத்துவமனைக்கான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2026 செப்டம்பர் 24) அம்மைய மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கமைய, இந்த மருத்துவ உபகரண நன்கொடையில் மூன்று (03) டிஜிட்டல் இரத்த அழுத்தமானிகள், ஐந்து (05) டிஜிட்டல் வெப்பமானிகள், பத்து (10) பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், இரண்டு (02) கணினிகள், மூன்று (03) எடைக் கருவிகள் மற்றும் ஒரு (01) சக்கர நாற்காலி ஆகியவை உள்ளடங்கியிருந்ததுடன், இந்த மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக வடமேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் துஷார பெர்னாண்டோ உள்ளிட்ட கடற்படை வீரர் குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

Accessibility Tools