EVENT NEWS › 2026

கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதற்கான பொதுவான நிலையான செயல்பாட்டு நடைமுறையைத் தயாரிப்பதற்கான பாநெறி கொழும்பில் வெற்றிகரமாக நிறைவுற்றது

25 Sep 2026

அமெரிக்க எரிசக்தி திணைக்களத்தின் அணுசக்திப் பொருட்களைக் கடத்துவதைக் கண்டறிதல் மற்றும் தடுப்பதற்கான அலுவலகத்துடன் இணைந்து, இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்குள் ஏற்படும் கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதற்காகப் பொதுவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்காக 2026 செப்டம்பர் 21 முதல் 25 வரை நடாத்தப்பட்ட சிறப்புப் பாநெறி இன்று (2026 செப்டம்பர் 25) கொழும்பில் வெற்றிகரமாக நிறைவுற்றது.

அதற்கமைய, இந்தப் பாநெறி யில் கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவு, இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், கடற்படையின் சிறப்புப் படகுப் படைப்பிரிவு, இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை அணுசக்தி சபை, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை சுங்கம், இடர் மேலாண்மை மையம், வர்த்தகக் கப்பல் பணிப்பாளர் நாயகம் அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய தேசியப் பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொண்டது.

மேலும், இந்தப் பட்டறையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம், இலங்கையின் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் அணுசக்திப் பொருட்களைக் கடத்துவதைக் கண்டறிவது தொடர்பான செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்காக, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவது பற்றிய செய்முறை வழிகாட்டல் வழங்கப்பட்டதோடு, அதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பும் வலுப்படுத்தப்பட்டது.

Accessibility Tools