தியாவன்ன ஓயா ஆற்றில் விழுந்த பெண்ணை கடற்படை மீட்டது

24 Aug 2026

பத்தரமுல்ல ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (2026 ஆகஸ்ட் 24) நண்பகல் தியவன்னா ஓயாவில் விழுந்த பெண்ணொருவர், கடற்படை உயிர்காக்கும் குழுவினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, தியவன்னா ஓயாவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு படகுப் படைப்பிரிவைச் சேர்ந்த உயிர்காக்கும் குழுவினர், ஜப்பான் நற்புறவு வீதியின் கிம்புலாவலவிற்கு அருகிலுள்ள சதுன் உயன பகுதியில் தியவன்னா ஓயாவில் நபரொருவர் விழுந்துள்ளதை அவதானித்து, மேற்கொண்ட அவசர மீட்பு நடவடிக்கையின் மூலம் நீரில் மூழ்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரை இவ்வாறு பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மேலும், கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண், நுகேகொடவைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Accessibility Tools