சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2276 கிலோ கிராமிற்கு அதிகமான பீடி இலைத் தொகுதி நீர்கொழும்பில் கைfப்பற்றப்பட்டது

23 Aug 2026

இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு வெல்ல வீதி கடற்கரை பகுதியில் இன்று (2026 ஆகஸ்ட் 23) காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியுடன் இரண்டு (02) டிங்கி படகுகளும் ஒரு (01) லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான கெளணி நிறுவனமும் நீர்கொழும்பு தெல்வத்தை பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு வெல்லவீதி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட சோதனையின் போது, அங்கு காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) டிங்கி படகுகளும் ஒரு (01) லொறியும் சோதனையிடப்பட்டன. இதன்போது, டிங்கி படகுகள் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு, லொறியில் கொண்டு செல்வதற்குத் தயார் செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2276 கிலோ கிராமிற்கு அதிகமான எடையுடைய பெருந்தொகையான பீடி இலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி, இரண்டு டிங்கி படகுகள் மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு தெல்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools