அங்குலானா கடல் பகுதியில் கடற்படைக் படகொன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

15 Aug 2026

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான அதிவேகத் தாக்குதல் படகொன்று இன்று (15) காலை 11.40 மணியளவில் ரோந்து நடவடிக்கையை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, அகுலான கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அப்படகிலிருந்த 11 கடற்படை வீரர்கள், அகுலான பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் அப்பகுதி மீனவ சமூகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடற்படை வீரர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சுகாதார நிலைமை கவலைக்கிடமாக இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், இலங்கை விமானப்படை மற்றும் அப்பகுதி மீனவ சமூகத்தின் உதவியுடன் இலங்கை கடற்படையினரால் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

Accessibility Tools