சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது

02 Aug 2026

2026 ஆகஸ்ட் 01 ஆம் திகதி நீர்கொழும்பு, பிரவுன்ஸ் கடற்கரையில் இலங்கை கடற்படையினர் பொலிஸ்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகுதியொன்று பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் 'களனி' நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, நீர்கொழும்பு பொலிஸாருடன் இணைந்து நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய ஐந்து (05) பைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, குறித்த பைகளில் அடைக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருநூற்று முப்பத்து நான்கு கிலோகிராமிற்கும் (234) அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Accessibility Tools