சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 36 பேர் சட்டத்தின் முன்னிலையில்

03 Aug 2026

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜூலை 16 ஆம் திகதி நிலாவெளி சல்பே ஆறு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, வின்ச் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், இரண்டு (02) டிராக்டர்களையும் கைது செய்தனர்.

மேலும், கடற்படையினர் 2026 ஜூலை 17 முதல் 31 வரையிலான காலப்பகுதியில் நாட்டின் கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் மேற்கொண்ட சோதனைகளின் போது; சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32) நபர்களுடன் பதினேழு (17) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

திருகோணமலை சல்பே ஆறு, முனை, புறாத் தீவு, சூடைக்குடா, அளம்பில், சிலாவத்தாய், யாழ்ப்பாணம் கட்டைக்காடு கேவில், தலைமன்னார் வன்காலைப்பாடு, கற்பிட்டி இப்பந்தீவு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள், டிராக்டர்கள், கெப் வண்டி, தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் கடல் அட்டைகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி, கொட்பே, மூதூர், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Accessibility Tools