சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் மன்னாரில் கைது
இலங்கை கடற்படையினரால் இழுப்புக்கடவாய் அந்தோனிபுரம் கடற்கரை பகுதியில் 2026 ஆகஸ்ட் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்கள், ஒரு படகு (01), சுமார் நான்காயிரத்து தொன்னூறு (4,900) கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பலான புவனேக்க ஆயதனத்தால், இழுப்புக்கடவாய் அந்தோனிபுரம் கடற்கரை பகுதியை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய படகொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி தரைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கடல் அட்டைகளின் தொகுதி கண்டெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 39 வயதுடைய இலுப்பக்கடவாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், கடல் அட்டைகளின் தொகுதி, படகு மற்றும் ஏனைய உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.













