சட்டவிரோதமான முறையில் சங்கு தொகையை வைத்திருந்த இருவர் கற்பிட்டியில் கைது

01 Aug 2026

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜூலை 30 ஆம் திகதி கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் மேற்கொண்ட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிக்கப்பட்ட சட்டப்பூர்வ அளவை விடக் குறைவான சங்கு தொகையை இரண்டு (02) வீடுகளில் சேமித்து வைத்திருந்த இருவர் (02) சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்குரிய இரண்டு வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, அந்த வீடுகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த, சுற்றளவு 70 மில்லிமீட்டருக்கும் குறைவான (அனுமதிக்கப்பட்ட சட்டப்பூர்வ அளவு இல்லாத) சங்குகள் அடங்கிய நாற்பத்தாறு (46) மூடைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 54 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் சங்கு தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Accessibility Tools