சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்ல முயன்ற 08 ஆடுகளுடன் 02 சந்தேகநபர்கள் புத்தளத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

09 Nov 2026

இலங்கை கடற்படையினர், இன்று (2026 நவம்பர் 09) புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்ல முயன்ற எட்டு (08) ஆடுகளுடன் கூடிய ஒரு (01) டிங்கி படகையும், இரண்டு (02) சந்தேகநபர்களையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இதற்கமைய, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினால், புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு (01) டிங்கி படகு அவதானிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட எட்டு (08) ஆடுகளுடன், படகில் இருந்த இரண்டு (02) சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், டிங்கி படகு மற்றும் ஆடுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Accessibility Tools