கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் திணைக்களப் பிரிவில் மூன்றாம் இடத்திற்கான விருதினை வென்றது
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல், அரசாங்கத் துறையின் திணைக்களப் பிரிவின் கீழ், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேச செயலகப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பதினொரு (11) அரச நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை, குறித்த பிரிவிற்கான தேசிய உற்பத்தித்திறன் விருதினை வெற்றிகொண்டது. 2026 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்களினால், கொழும்பு கடற்படை பொது மருத்துவமனைக்கான குறித்த உற்பத்தித்திறன் விருது, பதில் கெப்டன்மருத்துவத் திணைக்களம் – (மேற்கு), மருத்துவர் கொமாண்டர் தனஞ்சய கொடிகுவக்கு அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் நோயாளர் மைய சுகாதார சேவைகளை வழங்குதல், மனித மற்றும் பௌதீக வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துதல், மருத்துவ உபகரணங்கள் மற்றும் விநியோகப் பொருட்களை முறையாக முகாமைத்துவம் செய்தல், சுகாதாரத் தரநிலைகளைப் பேணுதல் மற்றும் பணியாளர்களின் தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடு ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய உற்பத்தித்திறன் காரணமாக, தேசிய உற்பத்தித்திறன் விருது மதிப்பீட்டில் அரசாங்கத் துறையின் திணைக்களப் பிரிவின் கீழ், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேச செயலகப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பதினொரு (11) அரச நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பினைக் கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை பெற்றுக்கொண்டது.
கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையின் சேவைகளை உயர் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்காக வழங்கப்பட்ட தலைமைத்துவம், சேவை பெறுநர்களின் கருத்துக்கள், திட்டமிடல் மற்றும் மூலோபாய நோக்கு, மனிதவள முகாமைத்துவம், செயன்முறைகள் மற்றும் அறிவு முகாமைத்துவம், நிறுவனத்தின் பெறுபேறுகள் மற்றும் பயன்தரு புத்தாக்கத் திட்டங்கள் ஆகியன குறித்த உற்பத்தித்திறன் விருதினை வழங்குவதற்கான பிரதான மதிப்பீட்டு அளவுகோல்களாக அமைந்தன.













