தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கான கடற்படையின் சமூகப் பணிப் பங்களிப்பு

11 Nov 2026

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, இலங்கைப் பொலிஸார் மற்றும் ஏனைய அமைப்புகள் இணைந்து 2026 நவம்பர் மாதம் 09ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை முன்னெடுத்துள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இலங்கை கடற்படையினர் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.

அதற்கமைய, இந்த விசேட தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தின் கீழ், டெங்கு அபாயம் நிலவும் 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், கூட்டு டெங்கு பரிசோதனைக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், உரிமையாளர்கள் அற்ற டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுத்தம் செய்தல், பாடசாலைகள், பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைச் சூழ சுத்திகரிப்புப் பணிகளை ஏற்பாடு செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினர் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புத் திட்டங்களில் கடற்படையைச் சேர்ந்த 4,730 கடற்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இத்திட்டங்களின் மூலம் வீடுகள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், கட்டுமானப் பகுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 170,140 இடங்களைப் பரிசோதித்து சுத்தப்படுத்துவதற்கான சமூக நலப் பணிகளில் இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

Accessibility Tools