சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் மூலம் 61 நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தம்

17 Nov 2026

இலங்கை கடற்படையினால், 2026 நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உள்நாட்டு கடற்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 61 நபர்களுடன் 18 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, திருகோணமலை பொல்மல்குடா, நீலாக்கேணி, கோணேஸ்வரம், கொக்கனட் பொயிண்ட், பவுல் பொயிண்ட், பிளாக் ஸ்டாப், சல்லிக்கோவில், முல்லைத்தீவு நாயாறு, புதுமாத்தளன், மன்னார் தாழ்வுப்பாடு, பேசாலை, ஊருமலை, புத்தளம் நுரைச்சோலை மற்றும் கருக்கப்பனை ஆகிய கரையோர மற்றும் கடற்பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில், கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளினால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இந்நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஈச்சிலம்பற்று, கோட்பே, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடமும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Accessibility Tools