வெளிநாட்டுக் கப்பலின் பணியாளர் ஒருவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வருவதற்கு கடற்படையினர் உதவி
கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த “MV SPIRIT OF TOKYO” (IMO 9761231) என்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து, ஆபத்தான நிலையில் இருந்த பணியாளர் ஒருவரை, கடற்படையினரின் படகின் மூலம் அவசரமாக கரைக்கு அழைத்து வந்து, குறித்த கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேலதிக சிகிச்சைக்காக காலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் இன்று (2026 நவம்பர் 01) அதிகாலை நடவடிக்கை எடுத்தனர்.
இலங்கைக்கு தெற்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தினுள் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பலின் பணியாளர் ஒருவர், குறித்த கப்பலில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தினால் தலையின் நெற்றிப் பகுதியில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கரைக்கு அழைத்து வருவதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் குறித்த கப்பலிலிருந்து கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த அறிவித்தலுக்கு பதிலளித்த இலங்கை கடற்படையினர், நோயாளிக்கு வழங்க வேண்டிய அவசியமான மருத்துவ ஆலோசனைகளை குறித்த கப்பலுக்கு தொடர்பாடல் மூலம் வழங்கினர். இன்று (2026 நவம்பர் 01), குறித்த கப்பலிலிருந்து நோயாள காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பகுதிக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, தெற்கு கடற்படை கட்டளையகத்தினால் கடற்படையின் P 451 படகு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலம் நோயாளி கரைக்கு அழைத்து வரப்பட்டு, இவ்வாறு மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திலும், அதனை அண்டிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயங்களிலும் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடலோடிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தயார் நிலையில் உள்ளனர்.













