சிறப்பு கடற்படை நடவடிக்கையின் மூலம் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடிப் படகொன்று ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

12 Nov 2026

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பலநாள் மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்வரும் காலங்களில் வெளியிட இலங்கை கடற்படை எதிர்பார்த்துள்ளது.

மேலும், கடந்த 2026 நவம்பர் 05ஆம் திகதி, இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 132 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 57 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய மொத்தத்துடன், உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்றைச் சந்தேகநபர்கள் ஐந்து பேருடன் கைது செய்தனர்.

மேலும், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படையினர் 2,773 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளையும், 2,130 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த வீதிப் பெறுமதி 114 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். குறித்த போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 73 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools