சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவிலான பீடி இலைகள் கற்பிட்டியில் சட்டத்தின் பிடியில்

20 Nov 2026

இலங்கை கடற்படையினரால், கற்பிட்டி கப்பலடி மற்றும் சின்னமுக்கரை கடற்கரைப் பகுதிகளை அண்மித்துப் இன்று (2026 நவம்பர் 20) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 460 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

இதற்கமைய, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கப்பலடி மற்றும் சின்னமுக்கரை கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பன்னிரண்டு (12) பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 460 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டு சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகுதி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Accessibility Tools