தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் 2026 நவம்பர் மாதம் 19ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த இருநூற்று எழுபத்து நான்கு (274) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவரை (01) கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பல் காஞ்சதேவ நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த குறித்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைத் தொகையுடன், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைத் தொகுதி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.













