சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த மூக்குத்தூள் எனும் போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினர், கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து, இன்று (2026 நவம்பர் 03) கல்முனைக்குடி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலை கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூக்குத்தூள் எனும் போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் கீழுள்ள இலங்கை கடற்படைக் கப்பலான தீகாயு நிறுவனத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக உடைமையில் வைத்திருந்த, 94 சிறிய பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த ஆறு (06) கிலோகிராமிற்கும் அதிகமான மூக்குத்தூள் எனும் போதைப்பொருள் தொகையுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்தக் கூட்டு நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 61 வயதுடையவர் என்பதுடன், கல்முனை, கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரையும் மூக்குத்தூள் போதைப்பொருள் தொகையையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.













