இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களும் அவர்களது படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன
யாழ்ப்பணம், நெடுந்தீவிற்கு தெற்கு திசையில் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, 2026 ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி கடற்படையினரால் பொறுப்பில் எடுக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகும் அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இன்று (2026 ஒக்டோபர் 04) காலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அதன்படி, சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) மீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
1 /
6













