சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படை தயார் நிலையில்

14 Oct 2026

நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்காக, இலங்கை கடற்படையின் 171 அனர்த்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று (2026 ஒக்டோபர் 14) காலை நிலவரப்படி, ஐந்து (05) அனர்த்த நிவாரணக் குழுக்கள் மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ், அனர்த்த நிவாரணக் குழுக்கள் ஐந்து (05) தேவைக்கேற்ப பணியில் ஈடுபடுத்துவதற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் நாவலப்பிட்டி பகுதியில் ஒரு (01) குழுவும், கம்பளை பகுதியில் ஒரு (01) குழுவும், இரத்தினபுரி பகுதியில் மூன்று (03) குழுக்களும் அடங்குகின்றன.

Accessibility Tools