சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படை தயார் நிலையில்

22 Oct 2026

நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கை கடற்படையின் 171 அனர்த்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (2026 ஒக்டோபர் 22) காலை நிலவரப்படி, சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திற்கு மூன்று (03) அனர்த்த நிவாரணக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, தேவைக்கேற்ப பணியில் ஈடுபடுத்துவதற்காக, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பல் பராக்கிரம நிறுவனத்தினால், இரத்தினபுரி புதிய நகரப் பகுதியில் மூன்று (03) அனர்த்த நிவாரணக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Accessibility Tools