சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த உலர்ந்த இஞ்சித் தொகையொன்று கற்பிட்டி தலவில கடற்பகுதியில் சட்டத்தின் பிடியில்

13 Oct 2026

இலங்கை கடற்படையினரால், கற்பிட்டி தலவில கடற்பரப்பை அண்டிய பகுதியில் இன்று (2026 ஒக்டோபர் 13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த உலர்ந்த இஞ்சித் தொகையொன்று கைப்பற்றப்பட்டு சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, வடமேல் கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினால், தலவில கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அப்பகுதியில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான 26 பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்து, கடற்படையினரின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் அந்த பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 1,189 கிலோகிராமிற்கும் அதிகமான உலர்ந்த இஞ்சித் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Accessibility Tools