இலங்கை கடற்படை நாட்டின் வடக்குக் கரையில் மேற்கொண்ட நடவடிக்கையில் பெரும் தொகையான போதைப்பொருள் கைப்பற்றல்

27 Sep 2026

இலங்கை கடற்படையினர் இன்று (2026 செப்டம்பர் 27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான படகுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிறுவனத்தின் பணியாளர்களால் இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கையின் போது, இக்கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேகநபரும் (01) படகொன்றையும் இவ்வாறு கடட்படையினர் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்காலத்தில் வழங்க கடற்படையினர் எதிர்பார்த்துள்ளனர்.

Accessibility Tools