சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 810 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது

19 Sep 2026

2026 செப்டம்பர் 18 ஆம் திகதி நீர்கொழும்பு கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட பீடி இலைத் தொகுதியுடன் இரு (02) சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, மேற்கு கடற்படைக்கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் களனி நிறுவனத்தினால், நீர்கொழும்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அந்தப் படகில் 21பைகளில் பொதிசெய்யப்பட்டிருந்த சுமார் 810 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியுடன் இரண்டு (02) சந்தேகநபர்களும், அந்த டிங்கி படகும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பற்றது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், டிங்கி மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Accessibility Tools