ரூ. 1.5 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 81 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் வட கடலில் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2026 செப்டம்பர் 27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரை பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தெரு மதிப்பில் ரூ. 1.5 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய சுமார் நாற்பத்தைந்து கிலோ ஐந்நூறு கிராம் (45.5) ஐஸ் போதைப்பொருள் மற்றும் முப்பத்தைந்து கிலோ எழுநூறு கிராம் (35.7) ஹெரோயின் போதைப்பொருட்களுடன் டிங்கி படகு (01) ஒன்றையும் சந்தேகநபர் (01) ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
வட கடற்படை கட்டளைக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படைக் கப்பலான அக்போ நிறுவனம் மற்றும் கட்டளைப் படகுகள் பிரிவு இணைந்து மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, இந்த கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் டிங்கி படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பாட்டார்.
இதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விசேட நிபுணத்துவ உதவியுடன் பரிசோதித்ததில், அதில் சுமார் 81 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தொகுதி, சந்தேகநபர் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இது தொடர்பாக பத்தரமுல்ல கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கெளரவ அருண ஜயசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் கடற்படையின் பதில் செயல்பாட்டு பணிப்பாளர் நாயகம் கொமடோர் சமில கருணாசேன ஆகிய சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இணையாக, "நாடு முழுதும் ஒன்றாக" போதைப்பொருள் பேரழிவிற்கு எதிரான தேசிய திட்டத்தின்கழ், சமுத்திரப் பகுதியை உள்ளடக்கிய தீவிர நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். வட கடலில் கடற்படை மேற்கொண்ட இந்த வெற்றிகரமான நடவடிக்கையில் 81 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் டிங்கி படகும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது வட கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிக அதிக அளவிலான நச்சுப் போதைப்பொருள் தொகையாகும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், முதன்முறையாக 5 கிலோ கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருள் பார்சல்கள் இந்தத் தொகுதியில் இருந்தமை விசேட அம்சமாகும் எனவும் அவர் கூறினார்.
‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் இலங்கை கடற்படை கடந்த ஆண்டில் ரூ. எழுபத்தி ஐந்து பில்லியனுக்கும் அதிகமான (75) தோராயமான தெருப் பெறுமதியுடைய நச்சுப் போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்தது என்றும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்களித்து வரும் கடற்படை, இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் ரூ. ஐம்பத்தி ஆறு பில்லியனுக்கும் அதிகமான (56) தோராயமான தெருப் பெறுமதியுடைய நச்சுப் போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. கடற்படை; கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், ஏனைய ஆயுதப் படைகள், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றுடன் இணைந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறைகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு தீவின் தரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால், நாட்டிற்குள் போதைப்பொருளைக் கொண்டுவருவதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படமாட்டாது எனப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். அத்துடன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்குத் அவசரத் தொலைபேசி எண்களான 1818 அல்லது 1997 ஊடாகத் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், போதைப்பொருள் பேரழிவு குறித்துச் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் ஆற்றிவரும் பங்கைப் பாராட்டுவதற்கும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் இதன்போது நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, வட கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகையே வட கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகும் எனக் குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய அவர், ‘நாடு முழுதும் ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்தும் அந்த சமூக பேரழிவிலிருந்தும் நாட்டின் பிள்ளைகளை மீற்பதற்காகவும், ‘போதைப்பொருள் இல்லாத நாடு - ஆரோக்கியமான பிரஜையின் வாழ்வு’ என்ற கருப்பொருளை நிஜமாக்குவதற்காகவும் இலங்கை கடற்படை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறைகள், சமுத்திரப் பங்காளிகள் மற்றும் பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உள்ளிட்ட நாட்டின் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக போதைப்பொருள் அச்சுறுத்தலை அடக்குவதற்கான நடவடிக்கைகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கருவிகளை வழங்கி பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரசாங்கம் அளிக்கும் ஒத்துழைப்பைப் பாராட்டிய கடற்படைத் தளபதி, இதன் காரணமாகவே சிக்கலான செயல்பாட்டுச் சூழலைக் கொண்ட கடல் சார்ந்த கடற்படை நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஆதரவையும் நிவாரணத்தையும் வழங்குவதில் எப்போதும் கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், மீன்பிடி நடவடிக்கைகளின் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அல்லது அதற்குத் துணைபுரியும் எந்தவொரு முயற்சியும் வெற்றியடைவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என வலியுறுத்திய கடற்படைத் தளபதி, பாதுகாப்பான மற்றும் வளமான சமுத்திரப் பகுதியை உறுதிப்படுத்த கடற்படை அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய கடற்படையின் பதில் செயல்பாட்டு பணிப்பாளர் நாயகம் கொமடோர் சமில கருணாசேன, நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்நாட்டு கடற்பரப்பிலிருந்து ஆழ்கடல் வரை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏனைய தரப்பினருடன் இணைந்து 'நாடு முழுதும் ஒன்றாக' தேசிய நடவடிக்கைக்காக கடற்படை தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும், இந்த நச்சுப் போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணம் குசுமந்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்த வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகக் கடற்படை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வட கடல் பகுதி ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பெரியளவிலான போதைப்பொருள் தொகையைக் கைப்பற்ற முடிந்ததாகவும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகக் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றுவதற்காக எதிர்காலத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.













