SPORT NEWS › 2026

கட்டளைகளுக்கு இடையேயான பூப்பந்தாட்டப் போட்டித்தொடர் – 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது

13 Nov 2026

இலங்கை கடற்படையின் கட்டளைகளுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டித்தொடரானது, 2026 நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வெலிசறை, இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிறுவனத்தில் அமைந்துள்ள கொமாண்டர் பராக்கிரம சமரவீர ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கில், நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேனவின் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டித்தொடரில் ஆண்களுக்கான சம்பியன்ஷிப்பை கப்பற்படை கட்டளையும், பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படைக் கட்டளையும் வெற்றிகரமாகக் கைப்பற்றின.

கடற்படை கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இப்போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில், ஆண்களுக்கான இரண்டாம் இடத்தைப் பயிற்சிக் கட்டளையும், பெண்களுக்கான இரண்டாம் இடத்தை தெற்கு கடற்படைக் கட்டளையும் பெற்றுக்கொண்டன. மேலும், இப்போட்டித்தொடரின் ஆண்களுக்கான புதிய வீரர் பிரிவு சம்பியன்ஷிப்பை கெடட் அதிகாரி எஸ்எம்சிஎஸ் ஸ்ரீராம் வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை தலைமை உடற்பயிற்றுவிப்பாளர் டபிள்யூஏஎஸ்ஐ விஜேசிங்க பெற்றுக்கொண்டார். பெண்களுக்கான புதிய வீரர் பிரிவு சம்பியன்ஷிப்பை வுமன் ஓடினரி சீமன் பிஎஸ்வை தர்மவங்ச வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை வுமன் ஓடினரி சீமன் டிடபிள்யூஏஎன்என் விஜேசிங்க பெற்றுக்கொண்டார்.

திறந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை கெப்டன் ஜேஏஏஎன் த சில்வா மற்றும் உடற்பயிற்றுவிப்பாளர் டிஎம்ஆர்எம் பண்டார ஆகியோர் வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை கொமாண்டர் அனுஷ்க அலஹகோன் மற்றும் லெப்டினன்ட் டபிள்யூஎம் பெர்னாண்டோ ஆகியோர் பெற்றுக்கொண்டனர். திறந்த பெண்களுக்கான இரட்டையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை தலைமை பெண் உடற்பயிற்றுவிப்பாளர்களான ஏஜிஏசி விஜேரத்ன மற்றும் ஜிஜிஎஸ் தமயந்தி ஆகியோர் வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பெண் ஜிஎச்ஜிஏ மதுஷானி மற்றும் வுமன் ஓடினரி சீமன் டிடிஓ விமலரத்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டித்தொடரின் திறந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை லெப்டினன்ட் மிரோன் பெர்னாண்டோ வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை உடற்பயிற்றுவிப்பாளர் டிஎம்ஆர்எம் பண்டார பெற்றுக்கொண்டார். திறந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை தலைமை பெண் உடற்பயிற்றுவிப்பாளர் ஏஜிஏசி விஜேரத்ன வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை தலைமை பெண் உடற்பயிற்றுவிப்பாளர் ஜிஜிஎஸ் தமயந்தி பெற்றுக்கொண்டார்.

மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை கொமாண்டர் அனுஷ்க அலஹகோன் மற்றும் கொமாண்டர் சஞ்சீவ பன்னெஹெக ஆகியோர் வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை கொமாண்டர் சந்தன விக்ரமாரச்சி மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சுரேஷ் குமார ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அத்துடன், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை கொமாண்டர் அனுஷ்க அலஹகோன் வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை கொமாண்டர் சஞ்சீவ பன்னெஹெக பெற்றுக்கொண்டார்.

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை கொமடோர் எம்ஏடிடிஎம் பியதிலக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் பிரியதர்ஷன விஜேரத்ன ஆகியோர் வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை கொமடோர் இந்திக எதிரிசிங்க மற்றும் கொமடோர் பிரியங்கர திசாநாயக்க ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அத்துடன், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை லெப்டினன்ட் கொமாண்டர் பிரியதர்ஷன விஜேரத்ன வெற்றிகொண்டதுடன், அதன் இரண்டாம் இடத்தை கொமடோர் பிரியங்கர திசாநாயக்க பெற்றுக்கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் கடற்படைக் கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படையினர் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools