SPORT NEWS › 2026

பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைத் தாய்நாட்டிற்குப் பெற்றுக்கொடுக்க இலங்கை கடற்படை வீர, வீராங்கனைகள் பங்களிப்பு

03 Nov 2026

பொதுநலவாய கபடிச் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் 2026 ஒக்டோபர் 23 முதல் 31 ஆம் திகதி வரை இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்றதுடன், அதில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற கடற்படை வீர, வீராங்கனைகள், ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் தாய்நாட்டிற்குப் பெற்றுக்கொடுக்கப் பங்களிப்பு வழங்கினர்.

அதன்படி, ஆண்களுக்கான கபடிப் போட்டியில் ஏபல் சீமன் கேஜீ ஹசந்த மற்றும் ஓடினரி சீமன் எஸ்எம் சபிஹான் ஆகியோர் பங்கேற்றதுடன், பெண்களுக்கான கபடிப் போட்டியில் வுமன் லீடிங் சீமன் ஏபிஎம் ஹன்சமாலி, வுமன் ஏபல் சீமன் ஆர் பிரியவர்ணா, வுமன் ஏபல் சீமன் பி மதுஷானி மற்றும் வுமன் ஏபல் சீமன் எஸ்எச்யூவி ஜயவீர ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி பொதுநலவாய கபடிப் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் தாய்நாட்டிற்குப் பெற்றுக்கொடுக்கப் பங்களித்த வீர, வீராங்கனைகள் 2026 நவம்பர் 02 ஆம் திகதி நாடு திரும்பினர். அவர்களை வரவேற்கும் நிகழ்வு, கடற்படை விளையாட்டுப் பணிப்பகத்தின் பொருளாளரான லெப்டினன்ட் கொமாண்டர் ஷஷிக பண்டார தலைமையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது.

Accessibility Tools