SPORT NEWS › 2026

‘Eagles’ Monsoon Cup – 2026’ கோல்ப் போட்டியில் கடற்படையினர் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தினர்

02 Nov 2026

‘Eagles’ Monsoon Cup – 2026’ கோல்ப் போட்டியானது, 2026 ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆகிய இரு தினங்களில், திருகோணமலை சீனக்குடா விமானப்படை Eagles’ Golf Links மைதானத்தில், விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் மற்றும் கோல்ப் விளையாட்டில் ஆர்வமுள்ள வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன்போது, கடற்படை கோல்ப் வீரர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, கிண்ணங்களை வென்றனர்.

அதன்படி, கொமடோர் மங்கள மும்முல்லகே அவர்கள் பாதுகாப்புப் படைகள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், கொமடோர் மஞ்சுள பியதிலக அவர்கள் ‘Nearest to the Pin’ போட்டிப் பிரிவில் கிண்ணத்தையும், கெப்டன் துஷார மகேஷ் அவர்கள் ‘Longest Drive’ போட்டிப் பிரிவில் கிண்ணத்தையும் வென்றனர்.

மேலும், இந்தப் பரிசளிப்பு விழாவில் இலங்கை கடற்படையின் கோல்ப் அணியின் தலைவரான ரியர் அட்மிரல் ரோஹான் ஜோசப் உள்ளிட்ட முப்படைகளின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools