SPORT NEWS › 2026

தேசிய மகளிர் பேஸ்பால் இரட்டை வெளியேற்றுப் போட்டித் தொடரில் கடற்படை இரண்டாம் இடத்தைப் பெற்றது

02 Nov 2026

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம், இலங்கை பேஸ்பால் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய மகளிர் பேஸ்பால் இரட்டை வெளியேற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி, 2026 ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது, இலங்கை கடற்படையின் மகளிர் பேஸ்பால் அணி இரண்டாம் இடத்தைப் பெற்று, போட்டியின் இரண்டாம் இடத்திற்கான விருதை வென்றது.

அதன்படி, முப்படைகள் உள்ளிட்ட நாட்டின் முன்னணி பேஸ்பால் அணிகள் பலவற்றின் பங்கேற்புடன், 2026 செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்தேசிய மகளிர் பேஸ்பால் இரட்டை வெளியேற்றுப் போட்டித் தொடரில், ஆறு (06) அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை கடற்படையின் மகளிர் பேஸ்பால் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதன்போது, இலங்கை இராணுவ அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 15–03 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்ததன் மூலம், இலங்கை கடற்படையின் மகளிர் பேஸ்பால் அணி இப்போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

மேலும், இப்போட்டியின் கிண்ணம் வழங்கும் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகள், இலங்கை பேஸ்பால் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools