SPORT NEWS › 2026

கட்டளைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டி – 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது

09 Nov 2026

கட்டளைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டி – 2026, இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபண்ணி நிறுவனத்தில் 2026 நவம்பர் மாதம் 07ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் மேற்கு கடற்படை கட்டளையும், பெண்கள் பிரிவில் தெற்கு கடற்படை கட்டளையும் சாம்பியன் பட்டங்களைத் தட்டிச் சென்றன.

கடற்படை கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 41 ஆண் வீரர்களும் 25 பெண் வீராங்கனைகளும் 2026ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்றனர்.80 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில், மேற்கு கடற்படை கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய லீடிங் இன்ஜினியரிங் மெக்கானிக் டப்ளியூடிஎம் குமார முதலிடத்தையும், கிழக்கு கடற்படை கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய லீடிங் இன்பன்ரி மென் எம்பிஆர்ஆர் பிரியதர்ஷன இரண்டாம் இடத்தையும், மேற்கு கடற்படை கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சீப் பெடி ஒபிசர் சிஇ ஹெட்டியாராச்சி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அதேவேளை, 15 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில், தெற்கு கடற்படை கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வுமன் ஓடினரி சீமன் டிடிஒ. விமலரத்ன முதலிடத்தையும், வுமன் ஓடினரி சீமன் என்ஜிடப்ளியூஎம்என்கே விஜேசேகர இரண்டாமிடத்தையும், கிழக்கு கடற்படை கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பயிற்சி பெண் கடற்படை வீராங்கனை டிஎன் பிரேமலால் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், இப்போட்டியின் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வரவு செலவுத் திட்டப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுருத்த கருணாதிலக கலந்துகொண்டார். இந்நிகழ்வில், கடற்படை சைக்கிள் ஓட்ட அணியின் செயலாளர் கெப்டன் தேஷப்பிரிய வீரரத்ன, இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபண்ணி நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கமாண்டர் புத்திக தரங்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools