SPORT NEWS 2026

2026 ஆம் ஆண்டிற்கான கட்டளைகளுக்கு இடையேயான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது

17 Sep 2026

கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஸ்குவாஷ் போட்டித் தொடர் 2026 செப்டம்பர் 09 முதல் 16 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் ரங்கல ஸ்குவாஷ் விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இப்போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மேற்கு கடற்படை கட்டளையும், பெண்கள் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை பயிற்சிக் கட்டளையும் வென்றன.

கடற்படை கட்டளைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல வீர வீராங்கனைகள் இம்முறை கட்டளைகளுக்கு இடையேயான ஸ்குவாஷ் போட்டித் தொடரில் பங்கேற்றனர். இப்போட்டித் தொடரின் ஆண்கள் புதிய வீரர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை லெப்டினன்ட் கமாண்டர் டபிள்யூஎஸ் எரங்கவும், இரண்டாம் இடத்தை லெப்டினன்ட் கமாண்டர் பிஏவை சங்கல்பனவும் வென்றனர். பெண்கள் புதிய வீராங்கனை பிரிவின் சாம்பியன் பட்டத்தை வுமன் ஓடினரி சீமன் எச்ஏடிடி குமாரியும், இரண்டாம் இடத்தை வுமன் ஓடினரி சீமன் எம்டபிள்யூஎச்கே டி சில்வாவும் வென்றனர்.

ஆண்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் சாம்பியன் பட்டத்தை பெடி ஒபிசர் (உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர்) எச்எம்ஏ பிரியந்த வென்றதுடன், அதன் இரண்டாம் இடத்தை லீடிங் உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் எம்எச்ஐ புத்திக வென்றார். அதேவேளை, ஆண்கள் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் சாம்பியன் பட்டத்தை சீப் பெடி ஒபிசர் (உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர்) டபிள்யூஜிடி பிரியதர்ஷனவும், இரண்டாம் இடத்தை கமாண்டர் பிஆர்பிடி தயாரத்னவும் வென்றனர்.

இப்போட்டித் தொடரின் ஆண்கள் திறந்த பிரிவின் சாம்பியன் பட்டத்தை லீடிங் உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் எம்எச்ஐ புத்திக வென்றதுடன், அதன் இரண்டாம் இடத்தை பெடி ஒபிசர் (உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர்) எச்எம்ஏ பிரியந்த வென்றார். அதேவேளை, பெண்கள் திறந்த பிரிவின் சாம்பியன் பட்டத்தை வுமன் ஏபல் சீமன் எச்எம்எஸ்ஓபி ஹேரத் வென்றதுடன், அதன் இரண்டாம் இடத்தை வுமன் ஏபல் உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் எச்ஜிஎன்வி ராஜபக்ஷ வென்றார்.

அதேபோன்று, திறந்த கேடயப் பிரிவின் சாம்பியன் பட்டத்தை லெப்டினன்ட் கமாண்டர் டபிள்யூஎம்எம் உதந்த வென்றதுடன், அதன் இரண்டாம் இடத்தை லெப்டினன்ட் கமாண்டர் எஸ்பிவைடிஏ சுபசிங்க வென்றார். மேலும், வளர்ந்துவரும் வீரர் விருதை லெப்டினன்ட் கமாண்டர் பிஏவை சங்கல்பன பெற்றுக்கொண்டார்.

மேலும், இப்போட்டித் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான ஒட்டுமொத்த இரண்டாம் இடத்தை தென் கடற்படைக் கட்டளை பெற்றுக்கொண்டது.

இப்போட்டித் தொடரின் பரிசளிப்பு விழா மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் நிர்வாகப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பலர் கலந்துகொண்டனர்.

Accessibility Tools