2026 கட்டளைகளுக்கு இடையிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது
2026 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி டென்னிஸ் மைதானத்தில் ‘கட்டளைகளுக்கு இடையிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் - 2026’ போட்டி நிறைவடைந்ததுடன், சாம்பியன் பட்டத்தை மேற்கு கடற்படையும், அதன் இரண்டாம் இடத்தை பயிற்சி கட்டளையும் பெற்றுக்கொண்டது.
2026 ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில், அனைத்துக் கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டித் தொடரானது; புதியவர்களுக்கான பிரிவு (Novices), திறந்த ஒற்றையர் மற்றும் இரட்டையர் (Open Singles & Doubles), 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர், மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய போட்டி நிகழ்வுகளின் கீழ் நடைபெற்றது. மேலும், இவ்வருட போட்டித் தொடரில் முதன்முறையாகப் பெண்களின் பங்கேற்பு கிடைத்தமை ஒரு சிறப்பம்சமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், கடற்படை டென்னிஸ் விளையாட்டில் புதிய திறமைகளை அடையாளம் காண்பதற்கும், அதற்காகப் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்தது.
அதன்படி, புதியவர்களுக்கான பிரிவில் (Novices Category) ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை சப்-லெப்டினன்ட் தரிந்து குருப்பு வென்றதோடு, அதன் இரண்டாமிடத்தை லெப்டினன்ட் தில்பஹன் முணசிங்க பெற்றார். மேலும், பெண்களுக்கான பிரிவில் சாம்பியன் பட்டத்தைச் வுமன் ஓடினரி சீமன் டிஎம்டிஎம் தென்னகோன் வென்றதுடன், அதன் இரண்டாமிடத்தை வுமன் மிட்ஷிப்மேன் எம்பி கலபடகே வென்றார்.
போட்டித்தொடரின் திறந்த ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை லீடிங் பிசிகல் இன்ஸ்டக்கர் பிஎம்எல்எஸ் பெரேராவும், அதன் இரண்டாமிடத்தை பெடி ஓபிசர் (பிசிகல் இன்ஸ்டக்கர்) என்ஜேஆர் ஹேமகுமாரவும் வென்றனர். மேலும், திறந்த இரட்டையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை பெடி ஓபிசர் (பிசிகல் இன்ஸ்டக்கர்) என்ஜேஆர் ஹேமகுமார மற்றும் லீடிங் பிசிகல் இன்ஸ்டக்கர் பிஎம்எல்எஸ் பெரேரா ஆகிய இணையர் வென்றதோடு, அதன் இரண்டாமிடத்தைக் கெப்டன் நுவன் அரந்தர மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சுரேஷ் எரங்க ஆகியோர் வென்றனர்.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைக் கெப்டன் நுவன் ரவிந்திரநாத் வென்றதோடு, அதன் இரண்டாமிடத்தைக் கொமடோர் தனஞ்சன ராஜபக்ஷ பெற்றார். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரட்டையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைக் கொமடோர் பிரியங்கர திசாநாயக்க மற்றும் கெப்டன் நுவன் ரவிந்திரநாத் ஆகிய இணையர் வென்றதுடன், அதன் இரண்டாமிடத்தைக் கொமடோர் துலித தேவப்ரிய மற்றும் கொமடோர் தனஞ்சன ராஜபக்ஷ ஆகியோர் வென்றனர்.
மேலும், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைக் கொமடோர் துலித் தேவப்ரிய வென்றதோடு, அதன் இரண்டாமிடத்தைக் கொமடோர் பிரியங்கர திசாநாயக்க பெற்றார். அத்துடன், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரட்டையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைக் கொமடோர் பிரியங்கர திசாநாயக்க மற்றும் கொமடோர் தனஞ்சன ராஜபக்ஷ ஆகிய இணையர் வென்றதுடன், அதன் இரண்டாமிடத்தைக் கொமடோர் மலின் பெரேரா மற்றும் கொமடோர் துலித் தேவப்ரிய ஆகியோர் வென்றனர்.
மேலும், கட்டளைகளுக்கு இடையிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் - 2026’ போட்டியின் பரிசளிப்பு விழா, கடற்படை பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளை உட்பட அனைத்து கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கடற்படை வீரர்களும் கலந்துகொண்டனர்.













