இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் கிரிஷாந்த ரணசிங்க பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் விரைவான தாக்குதல் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் கிரிஷாந்த ரணசிங்க 2020 ஜூலை 25 ஆம் திகதி பொறுப்பேற்றார்.

அதன்படி முன்னாள் கட்டளை அதிகாரி, கமாண்டர் இனேஷ் பிரிதிமால் மூலம் கப்பலின் பொறுப்புக்கள் அதிகாரப்பூர்வமாக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் வைத்து புதிய கட்டளை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்காக கடற்படை கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக கலந்து கொண்டார். கப்பலின் புதிய கட்டளை அதிகாரியால் பிரிவு சோதனையை தொடர்ந்து முறையான விழாவின் நடவடிக்கைகள் நிறைவடைந்தன.