சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை மற்றும் கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சதுப்புநில நடவு மற்றும் கரையோர தூய்மைப்படுத்தும் திட்டமொன்று 2020 ஜூலை 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு இடம்பெற்றன.

2020 உலக சதுப்பு நில தினத்துக்கு இணையாக சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் நிலையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த சதுப்புநில நடவு திட்டம் 2020 ஜூலை 26 அன்று பொன்னாலை களப்பு கடற்படை சதுப்புநில பாதுகாக்கும் பகுதியில் நடத்தப்பட்டது. இங்கு சுமார் 400 சதுப்புநில மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதுடன் வடக்கு கடற்படை கட்டளையின் ஏராளமான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இலங்கையின் கடல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இலங்கை கடற்படை, சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்க திட்டத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள களப்பு பகுதிகளை மையமாகக் கொண்டு ஏராளமான சதுப்புநில தாவரங்களை இதுவரை நடவு செய்துள்ளது.

இதற்கு இணையாக, வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு 2020 ஜூலை 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பல கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன, அங்கு வடக்கு கடற்படை கட்டளையின் காங்கேசன்துறை துறைமுகம், கோவிலன், மாங்கும்பான், விநயசோட், மாவலிதுரை, வல்லன். சம்பிலிதுரை மற்றும் வெத்தலகேனி கடற்கரைகள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் காலி கோட்டை கடற்கரை, கிங்தோட்டை கடற்கரை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டன. ஒவ்வொரு கட்டளையிலிருந்தும் ஏராளமான கடற்படை உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

தற்போதுள்ள கோவிட் 19 ஆபத்து நிலைமை காரணமாக சுகாதாரத் துறை அளித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இந்த திட்டங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன, மேலும் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை பாதுகாக்க எதிர்காலத்திலும் இதுபோன்ற சூழல் நட்பு திட்டங்களை செயல்படுத்த கடற்படை தயாராக உள்ளது.