இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன். விகாஸ் சூட் (Captain Vikas Sood) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று ( 2020 ஜுலை 28 )சந்தித்தார்.

அங்கு, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 24 வது கடற்படைத் தளபதியாக பதவியேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார், அதே நேரத்தில் கடற்படைத் தளபதியும் புதிய பாதுகாப்பு ஆலோசகரை வாழ்த்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்த நல்லுறவு கலந்துரையாடலின் பின்னர் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பினை நினைவு கூறும் வகையில் இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.