கொமடோர் பிரியந்த பெரேரா தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்

கமடோர் பிரியந்த பெரேரா தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக 2020 ஜூலை 31 அன்று தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் கஸ்ஸப போல், காலி தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கொமடோர் பிரியந்த பெரேராவிடம் கடமைகளை ஒப்படைத்தார். தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு கொமடோர் பிரியந்த பெரேரா கடற்படை தலைமையகத்தில் கடற்படை செயல்பாடுகள் இயக்குனராக பணியாற்றினார்.

அங்கு புதிய தளபதி அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய தெற்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர். குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் அவர்களுக்கு கடற்படை அதிகாரிகள் தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய மரியாதை செலுத்தினர்.