இலங்கை கடற்படையின் அபீத II, ரணவிக்கிரம மற்றும் ரணவிஜய கப்பல்களுக்கான புதிய கட்டளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கொமாண்டர் சமில ராஜபக்ஷ, கொமாண்டர் சாந்த அம்பன்வல மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் இந்துவர தர்மரத்ன ஆகியோர் முறையே இலங்கை கடற்படை கப்பல் அபீத II, ரணவிக்ரம மற்றும் ரணவிஜய ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளாக 2020 ஆகஸ்ட் 04 அன்று நியமிக்கப்பட்டனர். இந்த கப்பல்களின் முன்னாள் கட்டளை அதிகாரிகளான முறையே கொமாண்டர் சந்தன பாவுலுகே, கொமாண்டர் ருவன் எதிரிசிங்க திருகோணமலை கடற்படை கப்பல்துறையிலும் கொமாண்டர் எரந்த விக்கிரமசிங்க கங்கசந்தூரை துறைமுகத்திலும் புதிய கட்டளை அதிகாரிகளுக்கு கட்டளை அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஒப்படைத்தனர்.

திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் இடம்பெற்ற கட்டளை அதிகாரிகளின் நியமனம் விழாவில் கொடி அதிகாரி, கடற்படை கொடி கட்டளை ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக கழந்துகொண்டதுடன் கங்கசந்தூரை துறைமுகத்தில் இடம்பெற்ற கட்டளை அதிகாரிகளின் நியமனம் விழாவில் வடக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கமடோர் சுதத் லேல்வல கலந்து கொண்டார்,