கின் நதி பகுதியில் வெள்ள அச்சுறுத்தலைத் தவிர்க்க கடற்படையின் பங்களிப்பு

கடந்த தினங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணத்தினால், காலி வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் கடற்படையினரால் அகற்றப்பட்டன. குறித்த நடவடிக்கை மூலம் இப்பகுதியில் தாழ்வான பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

தீவின் தென் மேற்குப் பகுதியில் பெய்த மழையால், கின் ஆற்றின் நீர் மட்டத்தில் அதிகரிப்பு காணப்பட்டன. ஆற்றின் குறுக்கே பல இடங்களில் அமைந்துள்ள பாலங்களில் பெரும்பாலும் மூங்கில் புதர்கள், மரத்துண்டுகள் மற்றும் குப்பைகள் சிக்கியுள்ளதால் இந்த நிலைமை வெள்ள அபாயத்திற்கு வளர ஒரு போக்கு இருந்தது.

இந்தப் பின்னணியில், தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை சுழியோடி குழுவினர், அந்த தடைகளை அகற்றுவதற்காக அந்தந்த இடங்களுக்கு விரைந்து சென்றுள்ளனர். பல மணிநேர கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, கடற்படை வீரர்கள் அந்த தடைகளை நீக்கி, நதி நீர் கீழ்நோக்கி செல்ல நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

அதிகரித்து வரும் வெள்ள அபாயத்தால் நிம்மதியடைந்த அப்பகுதி மக்கள் கடற்படைக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, நிலவும் பாதகமான வானிலை நிலைமைகளின் கீழ் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரகால சூழ்நிலையையும் சமாளிக்க கடற்படை குழுக்கள் எச்சரிக்கையாக இருக்கிறது.