கேப்டன் புத்திக ரூபசிங்க இலங்கை கடற்படைக் கப்பல் சயுரவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலான சயுரவின் புதிய கட்டளை அதிகாரியாக (2020 ஆகஸ்ட் 06) அன்று கேப்டன் புத்திக ரூபசிங்க கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, கப்பலின் முன்னால் கட்டளை அதிகாரி கேப்டன் நிலந்த ஹேவாவிதான திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் வைத்து அதிகாரப்பூர்வமாக கேப்டன் புத்திக ரூபசிங்க விடம் கடமைகளை ஒப்படைத்தார். இந்நிகழ்வுக்காக கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக கலந்து கொண்டார்.

இலங்கை கடற்படையின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000 ஆம் ஆண்டில் இனைந்த இந்த ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் பல ஆண்டுகளாக இலங்கை கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய கப்பலாக இருந்தது. மனிதாபிமான நடவடிக்கையின் போது எல்.டி.டி.இ மிதக்கும் ஆயுதங்களை அழிப்பது உட்பட பல கடற்படை நடவடிக்கைகளில் பாராட்டத்தக்க பங்கைக் கொண்டிருந்த சயுர கப்பல் தற்போது தீவைச் சுற்றியுள்ள கடல் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளது.