கேப்டன் ஹர்ஷ டி சில்வா 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கேப்டன் ஹர்ஷ டி சில்வா இன்று (2020 ஆகஸ்ட் 07) இலங்கை கடற்படையின் முதன்மைப் படைப்பிரிவுகளில் ஒன்றான 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்.

திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது கேப்டன் ஹர்ஷ டி சில்வா முன்னாள் கட்டளை அதிகாரி கேப்டன் தம்மிக விஜேவர்தனவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவு, தற்போது கடற்படை நடவடிக்கைகளுக்கு தயாரான கடற்படையின் வலிமையான தாக்குதல் படைப்பிரிவுகளில் ஒன்றாகும்,