63 வது கெடட் ஆட்சேர்ப்புக்கான புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன

இலங்கை கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 63 வது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் 2020 ஆகஸ்ட் 19 ஆம் திகதி அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

இங்கு கெடட் அதிகாரிகளை உரையாற்றிய கடற்படை தளபதி, கெடட் அதிகாரிகளுகளுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, கடற்படை குடும்பத்தினருக்கு அன்பான வரவேற்பையும் அளித்தார். தளபதி மேலும் கூறுகையில்,கெடட் அதிகாரிகளாக கடற்படையில் சேருவதற்கான முடிவு அவர்கள் எடுத்த மிகச் சிறந்த முடிவு என்றும், இன்று முதல் கெடட் அதிகாரிகளின் வாழ்க்கையின் ஒரு புதிய அம்சம் திறக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு கடற்படை அதிகாரியாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றியமைக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார். , கடினமான மற்றும் சவாலான பயிற்சி எதிர்காலத்தில் ஒரு வலுவான அதிகாரியை உருவாக்கும் என்றார். தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்காக தங்கள் குழந்தைகளை கடற்படைக்கு ஒப்படைத்த கெடட் அதிகாரிகளின் அன்பான பெற்றோருக்கும் கடற்படை தளபதி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடற்படை தலைமையகத்தின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் உட்பட கெடட் அதிகாரிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.